• Mon. Sep 9th, 2024

இலங்கையின் அதிவேக வீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு கார்!

Oct 5, 2021

இலங்கையின் தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ நுழைவு பகுதிக்கு அருகில் சொகுசு மோட்டார் காரில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக தீ பற்றி எரிந்துள்ளது.

இந்த அனர்த்தம் இன்று காலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தீ பரவல் ஏற்பட்ட போது காரின் சாரதி வாகனத்தில் இருந்து பாய்ந்து உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.