• Sat. Jan 18th, 2025

தமிழ் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உத்தரவு

Oct 6, 2021

இலங்கை – அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்த சிறை கைதிகள் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த 8 கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையர் நாயகம் மற்றும் அனுராதபுரம் சிறை கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்துமாறு இவ்வாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.