• Wed. Jan 15th, 2025

கடற்கரைப்பகுதியில் காணப்பட்ட பாரிய பொருள்

Jun 15, 2021

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் இன்று(15) காலை பாரிய வெடிபொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

கடற்கரைப்பகுதியில் காணப்பட்ட குறித்த வெடிபொருள் தொடர்பில் மீனவர்களால் அது அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த கால போரின் போது கடலில் வீழ்ந்து வெடிக்காத நிலையில் தற்போது வீசும் கடும் காற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் அலை நிலையின் காரணமாக இக்குண்டு கரை ஒதுங்கி இருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் வெடிபொருளை அகற்றுவது தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.