• Sat. Dec 7th, 2024

எரிபொருளுக்காக மாட்டுவண்டியில் பிரதேச சபை உறுப்பினர்

Mar 9, 2022

எரிபொருள் பெற்றுக்கொள்ள கொள்கலன்களுடன் மாட்டுவண்டியில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சென்றிருந்தார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கரைச்சி பிரதேச சபை அமர்வு, இன்று (09) இடம்பெற்ற நிலையில் தனது வாகனத்துக்கு எரிபொருள் இல்லாமையால் இவ்வாறு எரிபொருளை பெற்றுக்கொள்ள மாட்டுவண்டியில் பயணித்ததாக அவர் கூடியிருந்த மக்களிடம் தெரிவித்தார்.

இன்றைய தினமும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவான மக்கள் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.