• Sun. Dec 8th, 2024

இலங்கையில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கே ஒமிக்ரோன் பாதிப்பு

Dec 18, 2021

இலங்கையில் ஒமிக்ரோனினால் பாதிக்கப்பட்டவர்களில் அனேகமானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒமிக்ரோனினால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்படவில்லை அவர்களை தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்கவேண்டிய தேவைஏற்படவில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ள நால்வரில் மூவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என சுகாதார அமைச்சின் மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஒமிக்ரோனை தவிர்ப்பதற்கு தடுப்பூ{சிகளை செலுத்திக்கொள்வது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.