• Sun. Dec 8th, 2024

பயணக்கட்டுப்பாடுகளை நீக்குங்கள்; தேரர் போராட்டம்

Jun 14, 2021

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகளை நீக்கி நாட்டை திறக்கும்படி கோரி பௌத்த பிக்கு ஒருவர் ஏ-9 வீதி நடுவே அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் தம்புள்ளை நகரில் இன்று முற்பகலில் இருந்து இவ்வாறு போராட்டம் நடத்திய நிலையில் பொலிஸார் அவரை அங்கிருந்து நகர்த்த எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

திம்புலாகல விகாரையின் விகாராதிபதியான மாத்தளே சாஷனரத்தன தேரரே இவ்வாறு போராட்டத்தில் குதித்துள்ளார்.

மேலும் இதன் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அவர் கடும் சொற்களால் விமர்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.