• Fri. Mar 29th, 2024

இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு

Nov 24, 2021

இலங்கையின் பணவீக்கம் ஒக்டோபர் மாதத்தில் 8.3 வீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், செப்டெம்பர் மாதத்தில் 6.2 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் 2.1 ஆல் உயர்ந்து ஒக்டோபர் மாதத்தில் 8.3 வீதமாக அதிகரித்துள்ளது.

உணவுப் பொருட்களின் விலை 0.83 சதவீதமும், உணவு அல்லாத பொருட்களின் விலை 1.23 சதவீதமும் அதிகரித்துள்ளதாகவும் கடந்த மாதத்தை விட பணவீக்கம் அதிகரிப்பதற்கு வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு, சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் மற்றும் பல்வகைப் பொருட்களின் விலை அதிகரிப்புகள் முக்கிய காரணம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.