• Sat. Jan 18th, 2025

சிலாபம் கடற்கரையில் கரையொதுங்கிய உருளை

Jun 5, 2021

சிலாபம், முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபாடு கடற்கரையில் 4,000 கிலோவுக்கு அதிகமான எடையுள்ள பெரிய உருளையொன்று கரையொதுங்கியுள்ளது.

இதனையடுத்து உழவு இயந்திரம் மூலம் கடற்படையினர் அதனை இழுத்து கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

இந்த உருளை, துறைமுகங்களில் கப்பல்களை தரித்து வைத்திருக்கப் பயன்படுவதாகவும், சில காரணங்களால் அது உடைந்து கரையொதுங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறித்த உருளை பல ஆண்டுகள் பழமையானது என்று கடற்படை கூறுகிறது.

இதேவேளை கொழும்பு கடற்பரப்பில் தற்போது மூழ்கி வரும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.