• Mon. Oct 2nd, 2023

இலங்கையில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களிற்கு செல்ல தடை

Feb 5, 2022

ஏப்ரல் 30 முதல் கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குள் நுழைய தடை செய்யும் விசேட வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சர் இன்று காலை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய, ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பொது இடங்களில் காதார வழிக்காட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பொது இடங்கள்’ மற்றும் ‘முழு தடுப்பூசி’ பற்றிய வரையறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.