• Tue. Dec 3rd, 2024

இலங்கை தனது மனச்சாட்சியை இழந்துவிட்டது!

Jan 18, 2022

இலங்கை தனது தார்மீக மனச்சாட்சியை இழந்துவிட்டது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

எந்த குற்றஉணர்ச்சியிமின்றி பணம் எந்த கவலையுமின்றி பணம் அதிகாரம் ஆகியவற்றின் பின்னால் செல்வது என்றால் அதன் அர்த்தம் நாடு தனது தார்மீக மனச்சாட்சியை இழந்துவிட்டது என்பதே என அவர் தெரிவித்துள்ளார்.

சரியான மனச்சாட்சியுடன் மனிதர்களை வளர்த்தெடுப்பதே மிகவும் முக்கியமான விடயம் என தெரிவித்துள்ள கர்தினால் , இந்த நாட்டின் அனேகமான தலைவர்கள் ஏதாவது தவறினை செய்துவிட்டு அதற்கான நியாயங்களை முன்வைக்க முயல்கின்றதாகவும் அது சரியான விடயமல்ல எனவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்கள் அனைத்தையும் புறக்கணிக்கின்றனர் அவர்கள் சட்டத்தின் ஆட்சியை அலட்சியம் செய்கின்றதுடன், ஜனநாயகத்தின் கொள்கைகளை அவர்கள் புறக்கணிக்கின்றதாகவும் கர்தினால் தெரிவித்தார்.