எதிர்காலத்தில் அரசாங்கத்தால் டொலர்களை திரட்ட முடியாவிட்டால் மின்சார துண்டிப்பை தவிர்க்க முடியாததாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நாட்டில் இரண்டு மூன்று மாதங்களில் நிச்சயமாகப் பஞ்சம் ஏற்படும் என்றும் எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி ஏற்படும் என்றும் சம்பிக்க ரணவக்க கூறினார்.
இயற்கை உரத் திட்டம் எனக் கூறி இரசாயன உரத் திட்டம் நிறுத்தப்பட்டதால் நாட்டில் பஞ்சம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இயற்கை உரத் திட்டத்தால் நாட்டில் வாழ்வாதார விவசாயம் வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் தவறான உணவுக் கொள்கை மற்றும் மோசடிக் கொள்கையும் இதற்குப் பங்களித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் எதிர்காலத்தில் அரசாங்கத்தால் டொலர்களை திரட்ட முடியாவிட்டால் மின்சாரம் மற்றும் எரிபொருள் வெட்டுகள் தவிர்க்க முடியாததாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.