அழகான பெண்களின் படங்களை பதிவிட்டு, அவர்களின் தொடர்பிலக்கமென தமது தொலைபேசி இலக்கமும் இணைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது அவர் இதனை தெரிவித்தார்.
பேஸ்புக் வழியாக தரவிறக்கம் செய்யப்பட்ட அழகிய யுவதிகளின் படங்களை வலைத்தளம் ஒன்றில் தவறாக பயன்படுத்தி, அவர்களை தொடர்பு கொள்ளலாமென இணைக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களில் ஒன்று, தன்னுடையதென்பதை அவர் இதன்போது வெளிப்படுத்தினார்.
அந்த இலக்கத்தை பார்த்து, தனது இலக்கத்திற்கு இளைஞன் ஒருவர் அழைப்பேற்படுத்திய போதே தாம் அதை அறிந்து கொண்டதாகவும் ஹிருணிகா தெரிவித்தார்.
குறித்த இளைஞர் தொடர்பு கொண்ட பின்னரே தன்னை அவர் அடையாளம் கண்டு கொண்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோரியதுடன், பொலிசில் முறையிட வேண்டாமென கேட்டுக் கொண்டதாகவும் ஹிருணிகா கூறினார்.
இதேவேளை கொலைக்குற்றவாளி துமிந்த சில்வாவின் விடுதலைக்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு குறித்தும் தன்போது ஹிருணிகா தெளிவுபடுத்தியதுடன் துமிந்தா சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மன்னிப்பு வழங்கிய நடைமுறையை மட்டுமே அவர் கண்டுபிடிக்க விரும்பியதாகவும் ஹிருணிகா பிரேமச்சந்திர இதன்போது மேலும் கூறினார்.