பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஒருமாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு கொடுத்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார சுமித்ஆராச்சி ஒரு நாளைக்கு மூன்று வேளை உண்பவர்கள் இரண்டு வேளையாக அவர்களது உணவை குறைக்க வேண்டும் என்றார்.
கொரோனா வைரஸின் விளைவாக பொதுமக்கள் தற்போது கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்த ஜகத் குமார இதன் விளைவாக, ஒரு நாளைக்கு மூன்று வேளை உண்பவர்கள் இரண்டு வேளையாக அவர்களது உணவை குறைத்து சில தியாகங்கள் செய்யப்பட வேண்டும் என்றார்.
சில தியாகங்களைச் செய்வது, நாட்டை எதிர்காலத்தில் மீட்க உதவும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.