• Thu. Jun 8th, 2023

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

Jul 6, 2021

இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தங்க நகை உற்பத்தியாளர்கள் தங்கங்களை மறைத்து வைத்துள்ளமையே இதற்கு காரணம் என சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தங்க இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளமையினால் தங்க நகை உற்பத்தியாளர்கள் தங்களிடம் உள்ள தங்கங்களை மறைத்து சந்தையில் தங்கத்திற்கு தட்டுப்பாடு என கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ஒரு பவுண் தங்கத்தின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.​​

மேலும், தங்கம் இறக்குமதி செய்வதற்கான அதிகாரம் இலங்கை மத்திய வங்கிக்கு மாத்திரமே உள்ளது என்று இரத்தினகல் மற்றும் தங்க நகை தொழில்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியத்திஸ்த தெரிவித்துள்ளார்.