அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை எதிர்த்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் இன்று(28) முற்பகல்-11 மணி முதல் நண்பகல்-12 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் அடையாள அமைதி முறைப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
சுகாதார நடைமுறைகளைப் பேணிப் போராட்டம் நடைபெறும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் வேண்டுகோளின்படி ஏனைய பல்கலைக்கழக ஆசிரியர்களுடன் இணைந்து இன்றையதினம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை தாம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.