• Thu. Sep 21st, 2023

இலங்கை மருத்துவமனைகளின் பிரேத அறைகள் நிரம்பிவிட்டன!

Sep 3, 2021

இலங்கையில் கொரோனா தொற்று அதிகமாகியுள்ள நிலையில், மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் அகற்றப்படாமலிருக்கின்ற உடல்களை அகற்றுமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருத்துவமனைகளிலிருந்து இன்னமும் அகற்றப்படாமலிருக்கின்ற கொரோனா நோயாளிகளின் உடல்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மருத்துவமனைகளின் பிரேதஅறைகள் நிரம்பிவிட்டதால் மருத்துவமனைகளில் பிரேதங்கள் நிரம்புவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.