இலங்கையில் அடுத்துவரும் சில நாட்களில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கக் கூடும் எனப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக கடந்த சில நாட்களாக மாதிரிப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் பெருமளவான மாதிரிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாகவே தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும், இதனால் பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண மேலும் தெரிவித்தார்.