• Fri. Jul 26th, 2024

அமெரிக்காவில் திடீரென சரிந்து விழுந்த 12 மாடி குடியிருப்பு

Jun 25, 2021

அமெரிக்காவில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு ஒன்று திடீரென சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. இடிபாடுகளில் இருந்து 99க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விடிய விடிய மீட்புப்பணிகள் நடைபெற்றன.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. தகவலறிந்து தீயணைப்பு படை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கவே மீட்புப்பணிகளில் சிரமம் ஏற்பட்டது. முதல் கட்டமாக அவர்கள் 12 வயது சிறுவன் உள்பட 99க்கும் மேற்பட்டோரை மீட்டனர். ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.