• Fri. Jul 26th, 2024

உலகளவில் 17.60 கோடி தொற்று

Jun 13, 2021

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 17.60 கோடியைக் கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 17.60 கோடியைக் கடந்துள்ளது.

ஆம், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.60 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 15.95 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.22 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 84,500-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.