ஜப்பானிலுள்ள 187 அடி உயரமான பௌத்த தேவதை சிலையொன்றுக்கு 35 கிலோகிராம் எடையுள்ள முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கனோன் மற்றும் குவாய் யின் என அழைக்கப்படும் கருணை தேவதையின் (Goddess of Mercy) சிலை பிரமாண்ட சிலை ஜப்பானின் அய்ஸுவாகாமட்ஸு (Aizuwakamatsu) நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
57 மீற்றர்கள் (187 அடி) உயரமான சிலை இது. இச்சிலைக்கு இன்று முகக்கவசம் அணிவிக்கப்பட்டது.
இதற்காக 35 கிலோகிராம் எடையுள்ள முகக்கவசம் பயன்படுத்தப்பட்டது. ஊழியர்கள் நால்வர் கயிறுகள் வழியாக ஏறிச்சென்று இச்சிலைக்கு முகக்கவசம் அணிவித்தனர்.
கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக பிரார்த்தித்து இம்முகக்கவசம் அணிவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.