• Tue. Jul 23rd, 2024

சுமார் 97% மக்கள் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்படுவர்

Nov 16, 2021

ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டின் இறுதிக்குள் சுமார் 97% மக்கள் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

சில மாதங்களுக்கு முன் அமெரிக்கப் படைகள் ஆப்கானை விட்டு வெளியேறிய நிலையில், தாலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் ஆப்கானில் அவ்வப்போது குண்டுவெடிப்பு, கொலை, பெண்கள் போராட்டம் உள்ளிட்ட செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் சுமார் 97% மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் பாதிக்கப்படுவர் எனவும் 87 லட்சம் பேர் உணவுப் பஞ்சத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் ஐநா வேதனை தெரிவித்துள்ளது.