பிரேசிலின் Cuiabá நகரில் உள்ள Marechal Rondon சர்வதேச விமானநிலையத்தில் இருந்து The Azul Brazilian Airlines நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் சுமார் 132 பேருடன் Sao Paolo-விற்கு கடந்த 25-ஆம் திகதி உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலே, திடீரென்று விமானம் நிறுத்தப்பட்டது. உடனடியாக விமானத்தில் இருந்த பணிப் பெண், விமானம் வெடிக்கப்போகிறது, விமானத்தில் இருந்து அனைவரும் வெளியேறும் படி கூறியுள்ளார்.
இதைக் கேட்டு பீதியடைந்த பயணிகள், விமானத்தின் அவசர வழி வழியாக வெளியேறியுள்ளனர். இதில் 9 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகள் ஒருவரான Wenderson Campos என்பவர் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு கூறுகையில், திடீரென விமானம் நிறுத்தப்பட்டது.
அப்போது விமான பணிப் பெண் அவசர வழி வழியாக அனைவரையும் விமானத்தை விட்டு வெளியேறும் படி கூறினார். இதனால் பயணிகள் அனைவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வெளியேறியதால், பலரும் சிரமப்பட்டதாக கூறினார்.
மேலும், மற்றொரு பயணி கூறுகையில், விமானம் வெடிக்கப் போகிறது என்று கூறும் போது, பயணிகளின் மன நிலை எப்படி இருக்கும், ஆனால் ஒன்றும் ஆகவில்லை, கடவுளுக்கு நன்றி என்று கூறினார்.
இதன் பின் விமானிகள் பலர், மாற்று விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. விமான நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானத்தில் இருந்த பயணிகள் அவசர வழி வழியாக வெளியேற்றப்பட்டனர்.
பயணிகளுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் நாங்கள் வழங்குகிறோம். இது போன்று நடந்ததற்கு வருந்துகிறோம். விமானத்தில் ஏற்பட்ட டெக்னிக்கல்(மின்கசிவு) கோளாறு காரணமாக உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டதாகவும், அந்த நேரத்தில், அவசரகால நெறிமுறையைப் பின்பற்றியதாகவும் விமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது.