• Thu. Oct 31st, 2024

தாலிபன்களை புகழ்ந்து தள்ளும் அல்கொய்தா!

Sep 2, 2021

தலிபான்களுக்குக் கிடைத்தது வரலாற்று வெற்றி என அல்கொய்தா தீவிரவாத அமைப்பு பாராட்டியுள்ளது.

அமெரிக்க இணையதளமான தி லாங் வார் ஜர்னலுக்கு அல்கொய்தா அனுப்பிய செய்தியில் இவ்வாரு குறிப்பிடப்பட்டுள்ளது,

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவத்தை விரட்டி தலிபான்கள் வரலாற்று வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளனர்.

தி லாங் வார் ஜர்னலுக்கு அல்கொய்தா அனுப்பிய செய்தியில், காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் புனித குர்ஆனின் வாசகங்களைக் கேட்பதன் மூலம் அவர்களின் இதயம் அமைதி அடையட்டும்.

நம்பிக்கையற்றவர்களின் தலைமையாக இருந்த அமெரிக்கர்களை அவமானப்படுத்தி, தோற்கடித்த பெருமை, புகழ் எல்லாம் வல்ல இறைவனையே சேரும் எனவும் அல்கொய்தா புகழாரம் சூட்டியுள்ளது.