• Fri. Apr 19th, 2024

காரை பழுது பார்க்க 17 லட்சம் கேட்டதால் ஆத்திரம்; காரை தகர்த்த உரிமையாளர்

Dec 20, 2021

டெஸ்லா நிறுவனம் உலக அளவில் ஆட்டோமொபைல் துறையில் முன்னணியில் உள்ளது.இதன் நிறுவனரான எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர்களில் ஒருவர் ஆவார்.

டெஸ்லா நிறுவனத்தின் கார்கள் அனைத்தும் உலககெங்கும் புகழ்பெற்றவை. அதுமட்டுமின்றி இவர் ஸ்பைஸ் எக்ஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் நிறுவனத்தின் கார் ஒன்றை அதன் உரிமையாளர் வெடிவைத்து தகர்க்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தெற்கு பின்லாந்தின் கிம்மென்லாக்சோ என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

டூமாஸ் காட்டைனேன் என்பவர் தனக்கு சொந்தமான டெஸ்லா காரை கடந்த சில தினங்களுக்கு முன் பழுது பார்ப்பதற்காக ஒரு நிறுவனத்தில் ஒப்படைத்துள்ளார்.

அவர் காரை ஒப்படைத்த சில தினங்களில் அந்த நிறுவனத்தில் இருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. அங்கு சென்று பார்த்த போது அவரது காரை பழுது பார்ப்பதற்கு ரூ .17,00,000 லட்சம் (இந்திய மதிப்பில் ) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது காரை 17 லட்சம் கொடுத்து சரிபார்ப்பதற்கு பதிலாக 30 கிலோ டைனமைட்டைப் பயன்படுத்தி வெடிக்க வைத்துள்ளார்.

அவர் அந்த கரை வெடிக்க செய்வதற்கு முன் பொம்மிஜட்காட் என்ற யூடியூப் சேனலின் உதவி மூலம் அந்த நிகழ்வை படம்பிடித்துள்ளார்.

அதில் அவர் அந்த காரை மக்கள் கூட்டம் இல்லாத இடத்தில் வெடிக்க வைக்க தயாராகுகிறார். பின்னர் அவர் அந்த காருக்கு வெடிமருந்துகளை வைப்பதும் அதன் பிறகு அந்த கார் வெடித்து சிதறுவதும் படமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த வீடியோவை அந்த யூடியூப் சேனல் பல்வேறு கோணங்களில் இருந்து படம் பிடித்துள்ளனர். இது குறித்து அதன் உரிமையாளர் டூமாஸ் காட்டைனேன் கூறியதாவது :

நான் டெஸ்லாவை வாங்கியபோது, முதல் 1,500 கிமீ அது நன்றாக ஓடியது. பின்னர் அது சரியாக இயங்கவில்லை. எனவே எனது காரை பழுதுபார்க்கும் நிறுவனத்தில் ஒப்படைத்தேன்.

ஏறக்குறைய ஒரு மாதமாக கார் அங்கேயே இருந்தது, கடைசியாக எனது காருக்கு அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்று எனக்கு அழைப்பு வந்தது.

முழு பேட்டரி செல்லையும் மாற்றுவதே ஒரே வழி என்றும் அதற்கு ரூ .17,00,000 லட்சம் செலவாகும் எனவும் தெரிவித்தனர்.

எனவே, நான் எனது காரை எடுத்துக்கொள்கிறேன் என அவர்களிடம் சொன்னேன். அதன் பிறகு இதை சரிசெய்யும் முடிவை விடுத்தது எனது காரை வெடிக்கவைக்க முடிவு செய்தேன் ” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த காரை அவர் வெடிக்கவைத்த வீடியோ இணையத்தில் பதிவு செய்யப்பட்ட , சில மணிநேரங்களில் 2.23 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது