• Sun. Dec 8th, 2024

நைஜீரியாவில் விபத்துக்குள்ளான படகு – இதுவரை 20 சடலங்கள் மீட்பு

Dec 1, 2021

நைஜீரியாவின் வடக்கு மாகாணமான கானோவில் 50க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நேற்று(30) மாலை இடம்பெற்ற விபத்தைத் தொடர்ந்து இதுவரை 20 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் 07 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத விழாவில் கலந்து கொள்ள படாவ் கிராமத்தில் இருந்து பக்வாய் நகருக்கு மக்களை ஏற்றிச் சென்ற படகே விபத்துக்குள்ளாகியுள்ளது.

உயிரிழந்தவர்களில் பலர் மாணவர்கள் என்றும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதுவரை மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.