மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை ஹேக் செய்ததாக, 4 சீனர்கள் மீது அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம், கணினி தாக்குதலுக்கு உள்ளானதாக புகார் எழுந்தது.
அது குறித்தான விசாரணையில், சீன அரசு உதவியுடன் அமெரிக்காவின் பல நிறுவனங்கள் ஹேக் செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
அத்துடன் சீன நிறுவனங்களுக்கும், அவர்களது வியாபாரத்துக்கும் உதவும் வகையில் அமெரிக்க அரசுத்துறைக்கு சொந்தமான கணினிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கணினிகளும் ஹேக் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 4 சீனர்கள் இந்த ஹேக் செய்யும் பணியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.