இலங்கை உள்ளடங்கலாக உலகநாடுகள் பலவற்றிலும் சீனா அதன் இராணுவத் தளங்களை நிறுவுவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது.
குறிப்பாக இராணுவ மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்து சீனாவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எச்சரித்திருந்தது.
அத்தோடு சீனா அதன் இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படைகளின் பலத்தை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த திட்டத்தை கையிலெடுத்துள்ளது என்றும் அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அதற்கு பதிலளித்துள்ள சீனா “அனைவரும் திருடுகிறார்கள் என திருடன் நினைக்கிறான்” எனவும், அமெரிக்கா தற்போது 750-க்கு மேற்பட்ட வெளிநாட்டு இராணுவ முகாம்களை பேணுகிறது என்றும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.