• Tue. Oct 15th, 2024

நொறுங்கிய சரக்கு விமானம் – 9 விமான ஊழியர்கள் பலி

Nov 4, 2021

ரஷ்யாவில் சரக்கு விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 9 விமான ஊழியர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் இடம் பெற்றுள்ளது.

ரஷ்ய நாட்டில் பெலாரஸ் சரக்கு விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்தது. இந்த விமானத்தின் என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டதை அடுத்து வானில் வட்டமிட்டபடி பறந்தது.

அந்த சமயத்தில் திடீரென நொறுங்கி விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து போராடி அணைத்தனர்.

விமானத்தில் பயணம் செய்த 9 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான ஆண்டனவா ஏ.என்.12 என்ற விமானம், கடந்த 1970 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது.