• Fri. Nov 22nd, 2024

தெற்கு பிரான்சிற்கு போகவேண்டாம்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Aug 2, 2021

தெற்கு பிரான்சை நோக்கி காட்டுத்தீ நெருங்குவதால் மக்கள் யாரும் காட்டுக்குள் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

துருக்கி கிரீஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் வறண்ட வானிலை நிலவி வருவதோடு பலத்த காற்றும் வீசி வருகிறது.

இதனால் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனிடையே பிரான்சிலும் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருகிறது.

இந்நிலையில் காட்டுத்தீ பிரான்ஸ் நோக்கி வருவதால் காட்டுப் பகுதிக்குள் மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தெற்கு பிரான்சிலிருக்கும், Var, Alpes-Maritimes மற்றும் Bouches-du-Rhône ஆகிய காட்டுப் பகுதிக்குள் கட்டாயம் செல்லக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.