உலகிலேயே சிறந்த நாடாக தொடர்ந்து ஐந்தாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஜேர்மனி. பிரித்தானிய அரசியல் அறிவியலாளரான Simon Anholt மற்றும் ஆய்வு அமைப்பான Ipsos இணைந்து மேற்கொண்ட ஆய்வு ஒன்று, உலகளவில் நம்பிக்கைக்குரிய ஆய்வாக பார்க்கப்படுகிறது.
அந்த ஆய்வில், இந்த ஆண்டு உலகிலேயே சிறந்த நாடாக ஜேர்மனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் தயாரிப்புகள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் வறுமைக்கெதிராக போராடும் ஜேர்மன் அரசு ஆகியவை, ஜேர்மனிக்கு இந்த முதலிடத்தைப் பெற்றுத்தருவதில் முக்கிய இடத்தை வகித்துள்ளன.
ஆனால், கடந்த ஆண்டு இரண்டாவது இடத்திலிருந்த பிரித்தானியா, வெளிநாட்டவர்களை வரவேற்பதிலும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும், உலக மக்களிடையே நற்பெயரை இழந்துள்ளதால் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ட்ரம்ப் அதிபராக இருந்தபோது 10ஆவது இடத்தில் இருந்த அமெரிக்கா, இப்போது எட்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
முதலிடத்தைப் பெற்ற ஜேர்மனியைப் பின் தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் கனடாவும், அடுத்ததாக ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளும் சிறந்த நாடுகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.