பிரித்தானியா, போர்த்துக்கல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் மீதான பயணத் தடையை ஜேர்மனியின் பொது சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளது.
இதற்கமைய நாளை(07) முதல் நடைமுறைக்கு வரும் இந்த முடிவுகள், அதிபர் அங்கேலா மேர்க்கெலினால் அறிவிக்கப்பட்டது.
முன்னதாக டெல்டா மாறுப்பாட்டின் அச்சம் காரணமாக பிரித்தானியா, போர்த்துக்கல், ரஷ்யா, நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய ஐந்து நாடுகளுடனான விமான சேவைக்கு ஜேர்மனி தற்காலிக தடை விதித்திருந்தது.
தற்போது இத்தடை நீக்கப்பட்டுள்ளதால், குறித்த நாடுகளின் குடிமக்கள் இப்போது ஜேர்மனிக்குச் சென்று 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படலாம்.
கொவிட்-19க்கு எதிர்மறையை சோதித்தால் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை ஐந்து நாட்களுக்கு சுருக்கலாம். மேலும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் தனிமைப்படுத்தலை முற்றிலும் தவிர்க்கலாம்.