• Sun. Oct 20th, 2024

ரஷ்யாவில் பயணிகள் விமானம் மாயம்!!!

Jul 6, 2021

ரஷ்யாவில் 29 பேருடன் பயணித்த பயணிகள் விமானம், மாயமாகிள்ளதாக அந்நாட்டின் அவசர அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று (06) பிராந்திய தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்- கம்சாட்ச்கியிலிருந்து பழனா கிராமத்திற்கு செல்லும் வழியில் குறித்த விமானம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்தது என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் 28 பேருடன் ரஷ்ய ஏ.என்-26 விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

தேடல் மற்றும் மீட்பு குழுக்கள், தியா ரியாவுக்கு சென்று கொண்டிருப்பதாக அவசர அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் 22 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் இருந்ததாக அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.