• Sun. May 19th, 2024

முகாமுக்குள் கேட்ட ஹேப்பி பர்த்டே பாடல்.. மகிழ்ச்சியில் திகைத்த உக்ரைன் சிறுமி

Mar 7, 2022

நாடுகளில் அகதியாக தஞ்சம் அடைந்து வருகின்றனர் உக்ரைன் பொதுமக்கள். கையில் கிடைத்த பொருட்களுடன் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கும் இந்த மக்களிடையே சிறு புன்னகையை வரவழைத்து இருக்கிறது சமீபத்திய வீடியோ ஒன்று.

அந்தச் சிறுமியின் பெயர் அரினா. உக்ரைனை தாயகமாக கொண்ட அரினா தனது பெற்றோர்களுடன் ரோமானியாவில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி இருக்கிறாள்.

அப்போது அவளுடைய கூடாரத்திற்கு வெளியே கூச்சல் கேட்கிறது. துறுதுறு குழந்தையான அரினா உடனே வெளியே வந்து பார்க்கிறாள்.

மீட்புப்படை அதிகாரிகள், தன்னார்வலர்கள் அனைவரும் ஒன்றுகூடி அரினாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறுகின்றனர். ஆம். அன்றைய தினம் அரினாவின் 7வது பிறந்தநாள்.

பலூன்கள் காற்றில் ஆட, அதிகாரிகள் வாங்கிவந்த கேக் வெட்டப்படுகிறது. சுற்றி இருந்த அனைவரும் ‘ஹேப்பி பர்த்டே’ என சந்தோஷமாக பாட, மகிழ்ச்சியில் அந்தக் காட்சியை கண்கொட்டாமல் பார்க்கிறாள் விழா நாயகியான அரினா.

அதன் பிறகு அங்கு வந்திருந்த சிலர், தங்களிடம் இருக்கும் பொருட்களை பரிசாக அரினாவிடம் அளிக்கிறார்கள். புன்னகை மொழி பேசும் அரினா அனைத்து பரிசுகளையும் ஆர்வத்துடன் பெற்றுக்கொள்கிறாள்.

அகதி முகாமிற்குள் உக்ரேனிய சிறுமிக்கு பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.