• Mon. Dec 2nd, 2024

“நான் புதிய காதலியை தேடியலையும் உலகின் உயரமான மனிதர்

Dec 24, 2021

39 வயதான சுல்தான் கோசென், தென்கிழக்கு துருக்கிய நகரமான மார்டினில் பிறந்தார். இவர் உலகின் மிக உயரமான மனிதருக்கான கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.

மனிதர் அனைவரது வளர்ச்சிக்கு காரணமாக இருப்பது மூளையின் தண்டுவடத்தின் கீழ் அமைந்துள்ள பிட்யூட்டரி சுரப்பி ஆகும்.

அது அனைவருக்கும் சராசரியான செயல்பாடுகளை மேற்கொள்ளும். ஆனால் சுல்தான் கோசென்னுக்கு பிட்யூட்டரி சுரப்பியின் அசாதாரணமான செயல்பாடு காரணமாக அவர் அசுர வளர்ச்சி பெற்றார்.

அவர் 8 அடி 3 அங்குலம் (251 செ.மீ.) உயரத்துடன் காணப்படுகிறார்.

இவர் 2013-ல் சிரியப் பெண்ணான மெர்வ் டிபோவை மணந்தார். ஆனால் அவர் அரபு மொழி மட்டும் பேசியதால் இருவருக்கும் இடையே கருத்துக்களை பரிமாறிக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதன் காரணமாக இந்த ஜோடி சமீபத்தில் விவாகரத்து பெற்றது.

சுல்தான் கோசென் தனது புதிய துணையை தேடி ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்கு பயணம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் ரஷ்ய தொலைக்காட்சி பேட்டியில் கூறும்போது, “நான் புதிய காதலியை தேடி இங்கு வந்துள்ளேன்.

மேலும் ரஷிய பெண்கள் மிகவும் அன்பானவர்களாகவும், மிகவும் அழகானவர்களாகவும் இருப்பதை அறிந்தேன்.

எனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு மீண்டும் துருக்கிக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். ரஷிய பெண் எனக்கு ஒரு மகனையும், மகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதனையே நான் விரும்புகிறேன்”. இவ்வாறு சுல்தான் கோசென் கூறினார்.