• Fri. Jul 26th, 2024

ஆப்கானிஸ்தானில் புதிய அரசு பதவி ஏற்பு; பாகிஸ்தான்,ரஷியா, சீனாவுக்கு சிறப்பு அழைப்பு விடுத்த தலிபான்கள்

Sep 6, 2021

ஈரான் நாட்டில் உள்ள ஆட்சி முறை போல ஆப்கானிஸ்தானிலும் ஆட்சி முறையை கொண்டு வர தலீபான்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய அரசின் பதவியேற்புக்கு பாகிஸ்தான்,ரஷியா, சீனாவுக்கு தலிபான்கள் சிறப்பு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கியதனைத் தொடர்ந்து கடந்த 15 ஆம் திகதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றது.

இதற்கிடையில் தலீபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர்.

அங்குள்ள மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பிக்கள் என பலர் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடுகின்றனர்.

ஆனால் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தலீபான்கள் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே இது சம்பந்தமாக முடிவு எடுப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் நாட்டில் உள்ள பல்வேறு தலீபான் தலைவர்களையும் சந்தித்து பேசி வந்தனர்.

இதைதொடர்ந்து ஆப்கான் தலைநகர் கந்தகாரில் தலீபான் தலைவர்கள் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். ஈரான் நாட்டில் உள்ள ஆட்சி முறை போல ஆப்கானிஸ்தானிலும் ஆட்சி முறையை கொண்டு வர தலீபான்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலீபான் இயக்கத்தில் பல பிரிவுகள் இருக்கின்றதனால் அவர்கள் அனைவருக்கும் பதவி வழங்கும் வகையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தலீபான்களின் தலைவரான முல்லா ஹைபத்துல்லா அஹுன்ஸாடா புதிய அரசாங்கத்தின் சுப்ரீம் தலைவராகவும் இருப்பார் என்று தலீபான்களின் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் அனாமுல்லா சமங்கனி தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புதிய அரசு பதவி ஏற்கும் விழாவுக்கு பாகிஸ்தான், துருக்கி, கத்தார், ரஷியா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு தலீபான்கள் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையில், தலீபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இன்று காபூலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது,

போர் முடிந்துவிட்டது, நிலையான ஆப்கானிஸ்தான் வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆயுதம் எடுக்கும் எவரும் மக்களுக்கும் நாட்டிற்கும் எதிரி எனவும் அவர் கூறினார்.