• Tue. Apr 23rd, 2024

கினியாவில் ஆட்சியை கைப்பற்றிய இராணுவம்

Sep 6, 2021

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் அதிபர் ஆட்சி கலைக்கப்பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த 2010ம் ஆண்டு முதல் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று ஆல்பா காண்டே அதிபராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் அவரது ஆட்சி மீது பல்வேறு புகார்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் அதிபர் மாளிகையை தாக்கிய இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதாக அறிவித்துள்ளது. இராணுவ கர்னல் மமாடி டம்போயா இதுகுறித்து தொலைக்காட்சியில் அறிவித்தபோது, அரசாங்கத்தை இனியும் தனிநபர் ஒருவரிடம் ஒப்படைக்க முடியாது என்றும், இனி மக்களே கினியாவை ஆள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் கினியா இராணுவத்தின் இந்த செயலுக்கு ஐ.நா உலக சபை கண்டனம் தெரிவித்துள்ளது.