• Tue. Oct 15th, 2024

இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிகள் பிரேசிலில் இறக்குமதி

Jun 6, 2021

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை பிரேசிலில் இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டின் தேசிய சுகாதார ஒழுங்குமுறை அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதற்கிடையே தடுப்பூசிகளை தயாரித்து வெளிநாடுகளில் இறக்குமதி செய்யும் பணிகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தை தலைமையிடமாக வைத்து இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டிடம் ஏற்கனவே அனுமதி கோரப்பட்டிருந்தது.

இருப்பினும், அப்போது சில காரணங்களை கூறி பிரேசில் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் தேசிய சுகாதார ஒழுங்கு முறை அமைப்பான அன்விசா அந்த கோரிக்கையை நிராகரித்தது.

இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசிகளை பிரேசிலில் இறக்குமதி செய்வதற்கு அன்விசா அமைப்பு நேற்று முன்தினம்(04) ஒப்புதல் அளித்தது.

கோவாக்சின் இறக்குமதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால் முதற்கட்டமாக 40 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் பிரேசிலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.