• Sat. Apr 13th, 2024

இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்ட ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்கள்

Jun 6, 2021

1967 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய கிழக்குப் போருக்குப் பின்னர் சுமார் ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 17,000 பெண்கள் என்றும் 50,000 பேர் சிறுவர்கள் என்றும் கைதிகள் விவகாரங்களுக்கான ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

1967 முதல் 54,000 க்கும் மேற்பட்ட நிர்வாக தடுப்பு உத்தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 1967 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலிய சிறைகளுக்குள் மொத்தம் 226 பாலஸ்தீன் கைதிகள் இறந்துள்ளனர் என்றும் அந்நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவருமே ஒருவித உடல் அல்லது உளவியல் சித்திரவதை, துஷ்பிரயோகம் மற்றும் கொடூரமான துன்புறுத்தல் ஆகியவற்றை அனுபவித்ததாகவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.