உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் தற்போது அதன் வேரியண்டான “மு” வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வெவ்வேறு நாடுகளில் வேரியண்டாக உறுமாறி வருவது மேலும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தென் அமெரிக்காவில் புதிய வேரியண்டான ’மு’ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் கண்டறியப்பட்ட இந்த வேரியண்ட் தற்போது 36 நாடுகளில் பரவியுள்ளதாகவும், மிகவும் குறைவான அளவிலேயே பரவி இருந்தாலும், இது தடுப்பூசியை எதிர்க்க வல்லதாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளவும் உலக சுகாதார நிறுவனம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.