• Tue. Apr 16th, 2024

கொரோனாவின் புதிய பாதிப்புகள்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Jul 29, 2021

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்த நிலையில் புதிய பாதிப்புகள் அதிகரிப்பது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் உலகம் முழுவதும் தீவிரமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பல நாடுகளில் இரண்டாம் அலை உச்சமடைந்த நிலையில் தற்போது குறைந்துள்ள நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொரோனாவின் புதிய பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார அமைப்பு ‘அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்காரணமாக கோவிட் உயிரிழப்பு 21 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் குரிப்பிட்டுள்ளது.

அத்துடன் , கொரோனா இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அதிக அளவில் உயிரிழந்துள்ளதாகவும், . எனவே தடுப்பூசி செலுத்தி கொள்வதே உயிரிழப்பை தடுக்கும்’ எனவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.