• Tue. Mar 18th, 2025

மீண்டும் ஏவுகணை சோதனையை தொடங்கிய வடகொரியா!

Sep 13, 2021

கடந்த சில மாதங்களாக ஏவுகணை சோதனையை நிறுத்தியிருந்த வடகொரியா மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுடன் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து மோதல் போக்கில் இருந்து வரும் வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உள்நாட்டு பஞ்சம், கொரோனா உள்ளிட்ட காரணங்களால் சோதனையை நிறுத்தியிருந்த வடகொரியா தற்போது மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. சுமார் 1500 மைல் தொலைவில் உள்ள இலக்கை குறிபார்த்து அழிக்கும் ஏவுகணை சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி வருவது உலக நாடுகள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.