• Fri. Jul 26th, 2024

உக்ரைனுக்கு ஆதரவாக படைக்குழுக்களை குவிக்கும் நோட்டோ !

Mar 25, 2022

உக்ரைனுக்கு ஆதரவாக அண்டை நாடுகளில் கூடுதல் படைக்குழுக்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் நோட்டோ அமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தமாக பால்டிக் கடல் முதல் கருங்கடல் வரையில் 8 படைக்குழுக்களை நிறுத்த இருப்பதாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார்.

அதில் பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா மற்றும் ஸ்லோவேக்கியா உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 4 படைக்குழுக்கள் அனுப்பப்பட இருப்பதாக அவர் கூறினார்.

ஒருமாதத்திற்கும் மேலாக ரஷ்யா தொடுத்து வரும் போரில் உக்ரைனுக்கு மேற்கொண்டு உதவும் வகையில் நேட்டோ நாடுகளின் தலைவர்கள் நேற்று கூட்டம் கூடி விவாதித்தனர்.

இந்த சூழலில் ரசாயன, நுண்ணுயிர் ஆயுதங்கள், கதிரியக்க மற்றும் அணு ஆயுதங்களை எதிர்க்கும் கருவிகளை, நேட்டோ அமைப்பின் உயர் ராணுவ தளபதி தயார் நிலையில் வைத்திருப்பதாக ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்தார்.