• Fri. Jul 26th, 2024

போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்க வேண்டும் – கனடாவின் பிரதமர்

Jun 27, 2021

கனடாவில் 1,000 பழங்குடி குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளை நடத்தி வரும் கத்தோலிக்க திருச்சபை சார்பாக போப் ஆண்டவர் கனடாவுக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரியுள்ளார் கனடாவின் பிரதமர்.

கடந்த மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், கம்லூப்ஸ் நகரில் உள்ள உறைவிடப் பள்ளியில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது பூமிக்கு கடியில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமையன்று Saskatchewan மாகாணத்தில் உள்ள மேரிவல் ரெசிடென்ஷியல் பள்ளியில் 751 குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக The First Nations என்ற கனடா பழங்குகுடி குழு அறிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 1,000 பழங்குடி குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளை நடத்தி வரும் கத்தோலிக்க திருச்சபை சார்பாக போப் ஆண்டவர் கனடாவுக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என போப் பிரான்சிஸிடம் கூறியுள்ளார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

இதுகுறித்து ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, “மன்னிப்பு கேட்பது மட்டுமல்ல, கனேடிய மண்ணில் உள்ள பழங்குடியின கனேடியர்களிடம் மன்னிப்பு கேட்பது எவ்வளவு முக்கியம்” என்று புனித போப் பிரான்சிஸுடன் தனிப்பட்ட முறையில் நான் பேசியுள்ளேன்” என்று கூறினார்.