• Tue. Dec 3rd, 2024

பிரான்ஸில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தண்டனை மற்றும் அபராதம்

Feb 11, 2022

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் Freedom Convoy போராட்டத்திற்கு தடை விதிப்பதாக நகர காவல்துறை அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் பிரெஞ்சு Freedom Convoy வாகன ஓட்டிகள் பாரிஸுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படும் என்று பிரான்ஸ் தலைநகரின் காவல்துறை தெரிவித்துள்ளது.

கனேடிய ஆர்ப்பாட்டக்காரர்களால் ஈர்க்கப்பட்டு, கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸில் ஒன்றிணைந்த Freedom Convoy என்று அழைக்கப்படும் போராட்டகாரர்கள் புதன்கிழமை தெற்கு பிரான்சில் இருந்து புறப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி 11-14 வரை, பொது அமைதியின்மை அபாயத்தை காரணம் காட்டி, போராட்டக்காரர்கள் தலைநகருக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்று பாரிஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.

பாரிஸுக்குள் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது என்ற உத்தரவை மீறும் வாகன ஓட்டிகளுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, 4,500 யூரோ அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.