• Fri. Nov 22nd, 2024

வடகொரியாவுக்கு மீண்டும் கொரோனா தடுப்பூசிகளை வழங்க முன்வந்த ரஷ்யா

Jul 8, 2021

வடகொரியாவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு ரஷ்யா மீண்டும் முன்வந்திருக்கிறது.

வடகொரிய மக்கள் பசியால் வாடுவதாகவும், கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கு முன் பல நாடுகள் தடுப்பூசி வழங்க முன்வந்தபோது, தங்களுக்குத் தேவையில்லை என வடகொரியா நிராகரித்துவிட்டது.

அதற்குப் பதிலாக நாட்டின் எல்லைகளை அடைத்து விட்டது. அதனால் சீனாவில் இருந்து வர வேண்டிய இறக்குமதி தடைபட்டிருக்கிறது. உணவுப் பொருள்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

நாட்டின் உணவு நெருக்கடி ஏற்பட்டிருப்பதை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அண்மையில் ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் வடகொரியாவுக்கு தடுப்பூசி வழங்கத் தயாராக இருப்பதா ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் மீண்டும் ஒருமுறை கூறியிருக்கிறார்.

தங்களது நாட்டில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என வடகொரியா தொடர்ந்து கூறி வருகிறது.