• Fri. Jul 26th, 2024

மற்றொரு நாட்டை மிரட்டும் ரஷ்யா!

Mar 31, 2022

ஒரு பக்கம் உக்ரைனுடன் போரிட்டுக்கொண்டே, இன்னொரு பக்கம் மற்றொரு நாட்டை மிரட்டுவதற்காக, அந்நாட்டு வான் எல்லைக்குள் அணு ஆயுதங்களுடன் ரஷ்ய போர் விமானங்கள் நுழைந்துள்ள செய்தி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இம்மாதம் (மார்ச்) 2ஆம் திகதி, நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடன் நாட்டின் வான் எல்லைக்குள் நுழைந்துள்ளன. உடனடியாக ஸ்வீடன் விமானப்படை இரண்டு போர் விமானங்களை அனுப்ப, அவை சென்று அந்த ரஷ்ய விமானங்களை புகைப்படம் எடுத்துள்ளன.

அப்போதுதான் ஒரு திடுக்கிடவைக்கும் தகவல் தெரியவந்துள்ளது. ஆம், ஸ்வீடன் எல்லைக்குள் நுழைந்த நான்கு ரஷ்ய போர் விமானங்களில் இரண்டு, அணு ஆயுதங்களை சுமந்துகொண்டு வந்துள்ளன.

ரஷ்ய விமானங்கள் தங்கள் எல்லைக்குள் நுழைந்தது தவறுதலாக நடந்த ஒரு விடயம் அல்ல. அது வேண்டுமென்றே ரஷ்யா செய்த விடயம் என்கிறது ஸ்வீடன்.

அதாவது, சமீபத்தில் ஸ்வீடனும், பின்லாந்தும் இணைந்து போர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டன.

ஆகவே, அவை நேட்டோ அமைப்பில் இணையக்கூடும் என்று கருதும் புடின் அந்நாடுகளை பயமுறுத்தவே, வேண்டுமென்றே அணு ஆயுதங்களுடன் தன் போர் விமானங்களை தன் நாட்டு எல்லைக்குள் அனுப்பியதாக ஸ்வீடன் நம்புகிறது.

காரணம், ஸ்வீடனோ அல்லது பின்லாந்தோ நேட்டோ அமைப்பில் இணைந்தால், அவற்றிற்கெதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என இந்த சம்பவம் நடப்பதற்கு சில நாட்கள் முன்புதான் புடின் எச்சரித்திருந்தார்.

பனிப்போருக்குப் பின் ஸ்வீடன் இராணுவத்துக்காக செலவு செய்வதை பெருமளவில் குறைத்திருந்தது. ஆனால், 2014இல் ரஷ்யா கிரீமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டதைத் தொடர்ந்து, உஷாரான ஸ்வீடன் மீண்டும் தனது இராணுவத்தை வலுப்படுத்தத் துவங்கியுள்ளது அந்நாடு.