• Fri. Sep 29th, 2023

ரஷிய நாணயத்தில் மட்டுமே எரிவாயு வாங்க வேண்டும் – புதினின் எச்சரிக்கை

Apr 1, 2022

ரஷிய நாணயத்தில் எரிவாயு வாங்குவது தொடர்பாக உலக நாடுகளுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று(31) புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் தங்களிடம் ரஷிய நாணயமான ரூபிளைக் கொண்டுதான் எரிவாயு வாங்க வேண்டும், அப்படி செய்யாவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என கூறி உள்ளார். இன்று (ஏப்ரல்-1) முதல் இது அமலுக்கு வருகிறது.

இதற்காக ரஷிய வங்கிகளில் சிறப்பு கணக்கு தொடங்கப்படும், அவற்றின்மூலம் வெளிநாட்டு பணம், ரூபிளாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி புதின் குறிப்பிடுகையில், “யாரும் எங்களுக்கு இலவசமாக தரவில்லை. நாங்கள் தொண்டு செய்யவும் போவதில்லை. எனவே ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும்” என கூறி உள்ளார்.

ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள், ரஷியாவின் எரிவாயுவை பெரிய அளவில் நம்பி உள்ளன.