கொரோனாவை குணப்படுத்தும் மருந்தை கண்டறிய உலக சுகாதார நிறுவனம் சார்பில் 52 நாடுகளில் உலகளாவிய ஆராய்ச்சி நடந்து வருகிறது.
இதில், ரெம்டெசிவிர், ஹைட்ரொக்சிகுளோரோகுயின் உள்ளிட்ட 4 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டதில்
அவை பயனற்றவை என்று முடிவு செய்யப்பட்டன.
இந்தநிலையில், வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மேலும் 3 மருந்துகளை அடுத்தகட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்போவதாக உலக சுகாதார அமைப்பு நேற்று அறிவித்தது.
மலேரியாவுக்கு பயன்படும் அர்டிசுனேட், புற்றுநோய் மருந்தான இமடினிப், நோய் எதிர்ப்பு சக்திக்கு பயன்படும் இன்பிளிக்சிமேப் ஆகிய மருந்துகள் பரிசோதிக்கப்பட உள்ளன.
இதேவேளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதை இவை தடுக்கும் என்ற நம்பிக்கையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.