கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்ற கூட்டத்தில் பொதுமக்கள் இன உணர்வாளர்கள் திடீரென சுமந்திரனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் மண்டபத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. இதைனையடுத்து நிகழ்வு இடைநிறுத்தப்பட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் சுமந்திரன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்க பயணத்தை அடுத்து. கனடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கொண்டுள்ளார்.
கனடா தமிழரசுக் கட்சி கிளை மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கிளை கனடிய தமிழ் காங்கிரசு ஆகியன இணைந்து ஒழுங்கமைத்திருந்த மேற்படி நிகழ்வில் மேற்ப்படி அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், கலந்துரையாடல் நடக்கும் மண்டபத்துக்கு வெளியேற நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் காரணமாக குறித்த பகுதிக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.