பிரித்தானியாவில் பரபரப்பு மிகுந்த சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்தின் காரணமாக 3 பேர் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் Durham-க்கும் அருகே Bowburn-ல் இருக்கும் A1 மோட்டார் வே பகுதியில் நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 6.30 மணிக்கு நான்கு கார்கள் மற்றும் இரண்டு லொரிகள் மோதிக்கொண்ட பெரும் விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதில் இரண்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் Toyota Hilux காரை ஓட்டி வந்த ஓட்டுனர் என்பதும், மற்றொரு ஆண் மற்றும் பெண் இருவரும் Vauxhall Crossland காரில் வந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக இன்னும் சில காயமடைந்துள்ளனர். 41 வயது மதிக்கத்தக்க லொரி ஓட்டுனர் ஒருவர் இந்த வித்திற்கு காரணம், ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியது போன்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது வரை Bradbury மற்றும் Carrville-க்கான இரு வழிகளும் மூடப்பட்டுள்ளது.
குறித்த விபத்து காரண்மாக லொரி டிரக் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால், இதை அணைக்க தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளும் Dave Ashton, ”இது ஒரு பயங்கரமான விபத்தாக உள்ளது.
இதனால், மக்கள் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இது மிகவும் சிக்கலான மற்றும் நீண்ட விசாரணையாக இருக்கும் என்று கருதுகிறோம்.
ஏனெனில் விபத்து நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் தீ பரவியுள்ளது, வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இதனால் இந்த பகுதியை சரிசெய்வதற்கும், பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கால தாமதம் ஆகலாம் என்பதால், வாகனஓட்டிகள் இப்பகுதியை தவிர்த்து, முன்னரே வேறொரு மாற்றுப் பாதையை தெரிவு செய்யவும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது உறுதியானால், அவர்களின் புகைப்படம் மற்ற விபரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.